என்எஸ்ஜி: இந்தியாவின் கோரிக்கை விவாதிக்கப்படும்:சீன நிலைப்பாட்டில் மாற்றம்

Jaishankar

தலைநகர் சியோலில் நடைபெறவுள்ள என்எஸ்ஜி உறுப்பு நாடுகளின் ஆண்டுக் கூட்டத்தில் 2ஆவது நாளான வெள்ளிக்கிழமை விவாதம் நடைபெற வாய்ப்புள்ளது என்று ஹுவா சன்னிங் தெரிவித்தார்.

அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தல்:

இதனிடையே, என்எஸ்ஜி-யில் இந்தியா உறுப்பினராவதற்கு இந்த கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக என்எஸ்ஜி நாடுகளுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டியது அவசியம் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கும் சலுகை:

இந்த நிலையில், சீன அரசின் அதிகாரப்பூர்வ நாளேடான குளோபல் டைம்ஸில், “என்எஸ்ஜி-யில் இந்தியா சேருவதற்கு சீனா தடையாக இல்லை’ எனும் தலைப்பில் செவ்வாய்க்கிழமை கட்டுரை வெளியாகியிருந்தது.

அதில், பாகிஸ்தானைச் சேர்ந்த அணு விஞ்ஞானி ஏ.கியு.கான், அந்த நாட்டு அரசுக்கே தெரியாமல் அணு ஆயுதங்களை தயாரித்தார். இதற்கு தண்டனையாக, பல ஆண்டுகள் அவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டார். எனவே, இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அரசை நாம் குற்றம்சாட்ட முடியாது. மேலும், என்எஸ்ஜி-யில் இந்தியா உறுப்பினராவதற்கு ஏதேனும் சலுகைகள் காட்டப்பட்டால், அதனடிப்படையில் பாகிஸ்தானையும் என்எஸ்ஜி-யில் உறுப்பினராக சேர்க்க வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top