ஹெலிகாப்டர் பேர வழக்கு:அமலாக்கத் துறை சோதனையில் ரூ.86 கோடி பங்குகள் முடக்கம்

454269-chopper-deal-agustawestland-deal

ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர வழக்கு தொடர்பாக, தில்லி, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட 10 நகரங்களில் அமலாக்கத் துறையினர் திங்கள்கிழமை சோதனை நடத்தினர்.

இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு வெளிநாடுகளில் உள்ள ரூ.86 கோடி மதிப்பிலான பங்குப் பத்திரங்களை முடக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இதுதொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர வழக்கில் தொடர்புடையவர்களுக்குச் சொந்தமாக, தில்லி, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் உள்ள அலுவலகங்களிலும், நிறுவனங்களிலும் இந்தச் சோதனை நடைபெற்றது. சோதனையின்போது, பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதையடுத்து, வழக்கில் தொடர்புடையவர்களுக்குச் சொந்தமாக, துபை, மோரீஷஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள ரூ.86 கோடி மதிப்பிலான பங்குப் பத்திரங்களை முடக்குவதற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சட்ட விரோத பணப் பரிவர்த்தனைத் தடுப்புச் சட்டத்தின்படி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றார் அவர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top