யோகாவை கவுரவிக்கும் வகையில் அடுத்தாண்டு முதல் தேசிய அளவில் 2 விருதுகள் வழங்கப்படும்: மோடி

yoga1

நாடு முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது.

பல்வேறு மாநிலங்களில் பல்வேறு மதத்தினர் ஒன்றுகூடி யோகா தினத்தை அனுசரிக்கும் விதமாக யோகா பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

சண்டிகரில் நடைபெறும் யோகா தின கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி யோகா பயிற்சியில் கலந்துகொண்டார். காலை 6.30 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், முதியவர்கள் என 30 ஆயிரம் பேர் திரண்டனர்.

யோகா தினத்திற்கு உலக நாடுகள் அனைத்தும் ஆதரவு அளித்துள்ளன. சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் யோகாவுக்கு ஆதரவு கிடைத்து வருகிறது. யோகாவின் பயன்கள் மற்றும் சக்தியை பலர் அறியாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்று மோடி பேசியுள்ளார்.

சண்டிகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 21 மாநிலங்களில் இருந்து பள்ளி குழந்தைகள் கலந்து கொள்ளும் விதமாக “ஒலிம்பியாட்” என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளது.

யோகாவை பிரபலப்படுத்துவோரை கவுரவிக்கும் வகையில், அடுத்த ஆண்டு (2017) முதல் சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் இரண்டு விருதுகள் வழங்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top