சிரியா ராணுவ ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதாக அமெரிக்க, ரஷ்ய படைகள் அறிவிப்பு

160223071327_syrian_government_forces_640x360_afp_nocredit

சிரியாவில் நடைபெறும் ராணுவ நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பு பணிகளை மேம்படுத்துவதன் அவசியத்தை ரஷ்ய மற்றும் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் ஏற்றுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

தெற்கு சிரியாவில் தாங்கள் ஆதரவளித்து வரும் எதிர்தரப்பு போராளிகளை ரஷ்யா குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சக தலைமையகமான பென்டகன் குற்றம்சாட்டியிருந்த பின்னணியில், மேற்கூறிய தகவலை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமையன்று நடந்த சம்பவம் தொடர்பாக ”ஒரு ஆக்கப்பூர்வமான கருத்துப் பரிமாற்றம்” ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக பேச்சாளர் ஒருவர், போர் நிறுத்த மண்டலத்தின் வெளியே எதிர்தரப்பு போராளிகள் இருந்ததாகவும், அவர்கள் இருந்த இடம் குறித்த செய்கோள் தகவல்களை தெரிவிக்க அமெரிக்கா தவறி விட்டதாகவும் மேலும் கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top