தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடுகிறது

தமிழ்நாடு அரசு

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதம் இன்று தொடங்குகிறது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 15வது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டம் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது.முதல் நாளில் ஆளுநர் உரைக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை கூடிய கூட்டத்தில் மறைந்த திருப்பரங்குன்றம் எம்எல்ஏ சீனிவேல் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு பேரவை ஒத்தி வைக்கப்பட்டது.

பேரவையின் அலுவல் ஆய்வுக் குழு முடிவின்படி, 20-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்தார். அதன்படி, இன்று பேரவைக் கூட்டத்தில் ஆளுநர் உரை குறித்த விவாதம் தொடங்கவுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top