சிம்பு – த்ரிஷா – செல்வராகவன் முதல் முறையாக இணையும் அலைவரிசை திரைப்படம்!

alaivarisaiசெல்வ ராகவன் இயக்கும் ‘அலைவரிசை’ எனும் புதிய திரைப்படத்தில் சிம்பு மற்றும் திரிஷா இணைத்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டாம் உலகம் தோல்விக்குப் பிறகு இயக்குனர் செல்வராகவன் குறுகிய காலகட்டத்தில் ஒரு புதிய படம் இயக்க உள்ளார். இந்த படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக த்ரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். ‘அலை’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்திற்கு பிறகு சிம்புவும், த்ரிஷாவும் இணையும் மூன்றாவது படம் இது. ஆனால் இயக்குனர் செல்வராகவனுடன் சிம்புவும் திரிஷாவும் இணையும் முதல் படம் இதுதான்.  இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 25ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.

கெளதம்மேனனின் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் காதலர்களாக நடித்த சிம்பு-திரிஷா இருவரும் கொடுத்த அவுட்புட் இளவட்ட ரசிகர்களை உலுக்கி எடுத்தது. அந்த அளவுக்கு காதலின் உச்சம் தொடும் காட்சிகளில் வித்தியாசமான ரொமாண்டிக்கை வெளிப்படுத்தியிருந்தார்கள்.ஆனால், அப்படியொரு மெகா ஹிட் படத்தில் நடித்தபோதும் அதையடுத்து அவர்களை யாரும் ஜோடி சேர்க்கவில்லை. பல வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் அவர்கள் இணையப்போகிறார்கள். காதல் படங்களுக்கென்றே பெயர்போன செல்வராகவன் இந்த படத்தையும் முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தியே எடுக்க போகிறாராம்.

ரொமாண்டிக் த்ரில்லராக உருவாக இருக்கும் இந்தப் படத்தில் சிம்பு இதுவரை நடிக்காத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். புதுப்பேட்டை படத்திற்கு பிறகு இந்தப் படம் மூலம் யுவன் சங்கர் ராஜாவுடன் மீண்டும் கூட்டணி சேர்கிறார் செல்வராகவன். ரேடியன்ஸ் மீடியா சார்பில் வருண் மணியன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

மேலும் இந்த படத்திற்கு ‘அலைவரிசை’ என்று பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் சிம்பு, த்ரிஷா ஜோடி, செல்வா மீண்டும் யுவனுடன் கூட்டணி என ரசிகர்களைக் கவரும் நிறைய விஷயங்கள் இருப்பதால் இந்த தகவல், சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top