சென்னை தீனதயாள் வீட்டில் 800 ஆண்டுகள் பழமையான பிரம்மன் சிலை கண்டுபிடிப்பு: அர்ச்சகர் அடையாளம் காட்டினார்

Daily_News_1295129656792

பெரம்பலூர் மூத்தீஸ்வரர் சிவன் கோயிலில் திருடப்பட்ட 800 ஆண்டுகள் பழமையான பிரம்மன் சிலை, சென்னை தீனதயாள் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டை முரேஸ்கேட் சாலையில் உள்ள பங்களா வீட்டில் வசிப்பவர் தீனதயாள் (84). சில நாட்களுக்கு முன்பு இவரது வீடு மற்றும் குடோ னில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தி 285 ஐம்பொன் மற்றும் கற்சிலைகள், 96 ஓவியங்களை பறிமுதல் செய்தனர். இவை அனைத்தும் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. இந்த சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத் திருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

தீனதயாள் வீட்டில் கைப் பற்றப்பட்ட சிலைகள் அனைத் தும் தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் இருந்து திருடப் பட்டவை. இந்த சிலைகள் தங்கள் கோயிலில் காணாமல் போன சிலைகளா என்பதை நேரில் பார்த்து உறுதி செய்யும்படி தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில் நிர்வாக அலுவலர்களுக்கும் இந்து அறநிலையத்துறை சார்பில் உத்தர விடப்பட்டது. அதன்படி, சிலைகள் திருடுபோன கோயில்களின் நிர்வாகிகள், அர்ச்சகர்கள் சென்னை வந்து தீனதயாள் வீட்டில் கைப்பற்றப்பட்ட சிலைகளை பார்த் துச் சென்றனர்.

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதி யில் உள்ள மூத்தீஸ்வரர் சிவன் கோயில் அர்ச்சகர் கந்தசாமி, தீனதயாள் வீட்டில் இருந்த பிரம்மன் சிலையை பார்த்து அடையாளம் காட்டினார். இது தங்கள் கோயிலில் காணாமல்போன சிலை என்று உறுதியுடன் கூறினார். கடந்த 2011-ம் ஆண்டு திருடுபோன கல்லால் ஆன இந்த பிரம்மன் சிலை, 800 ஆண்டுகள் பழமையானதாகும்.

இதேபோல திருச்சி மாவட்டம் லால்குடி சிவலோகநாதர் கோயி லில் திருடப்பட்ட சிவகாமசுந்தரி கற்சிலையும் தீனதயாள் வீட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை திருச்சி மண்டல அற நிலையத்துறை அதிகாரி கல்யாணி அடையாளம் காட்டினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top