மனித உரிமைகள் ஆணையத்தின் 32 ஆவது கூட்டம் தொடக்கம்

மனித உரிமைகள் ஆணையத்தின் 32 ஆவது கூட்டம் ஜூன் 13 ஆம் தேதியிலிருந்து ஜூலை 1 ந் தேதி வரையில் நடைபெற இருக்கிறது.

UN

மூன்று வாரம் நடக்க இருக்கும் இந்த கூட்டத்தில் மனித உரிமைகள் ஆணையம் தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகியதைத் தொடர்ந்து முன்னால் மனித உரிமைகள் ஆணையத்தின் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

மேலும், ஒலிம்பிக் விளையாட்டின் மூலம் மனித உரிமையினை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும், வளர்ச்சிக்கான உரிமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முப்பதாவது வருடத்தையும், மற்றும் குழுவிற்கு நாடாளுமன்றங்களின் ஒத்துழைப்பு பற்றியும், ஐக்கிய நாடுகள் சபையின் உறிப்பினர்களின் ஒரு வருட செயல்பாடு பற்றியும் பேசப்படும்.

ஒரு நாள் முழுவதும் பெண்களின் மீதான மனித உரிமைகள் குறித்த விவாதம் நடைபெறும்.

மேலும், சிரியாவின் மீதான விசாரணை குறித்து மனித உரிமைகள் ஆணையம், சுயசார்பான சர்வதேச விசாரணை குழுவின் விவாதமும் நடைபெறும் .

இந்த மாதம் ஜூன் 29 அன்று இலங்கை குறித்த மனித உரிமை ஆணையர் அல் ஹுசைனின் அறிக்கையும் வாய்மொழி தகவல்களும் இடம் பெறுகிறது. இதில் பிப்ரவரியில் அவர் மேற்கொண்ட நான்கு நாள் இலங்கை பயணத்தில் அவரது அனுபவம் மற்றும் அவர் கவனித்த விடையங்களும் இடம் பெரும் என்று தெரிகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top