ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தமிழக வீரர் சதீஷ் தேர்வு

ரியோ ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டிக்கு தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தேர்வாகியுள்ளார்.

sathish_sivalingamபாட்டியாலாவில் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தேர்வானவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதில் ஆடவர் 77 கிலோ எடைப் பிரிவில் வேலூரைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம், அதிகபட்சமாக 336 கிலோ தூக்கி முதலிடம் பிடித்தார்.

இதனையடுத்து ரியோ ஒலிம்பிக்கிற்கு செல்லும் வாய்ப்பை சதீஷ் சிவலிங்கம் தட்டிச் சென்றார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடதக்கது.

இந்தியாவின் சார்பில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் தலா ஒருவரை அனுப்புவதற்கான தேர்வு முகாம் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்றது. அதனடிப்படையில் சதீஷ் குமாரும், மீராபாய் சானுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் சத்துவாச்சேரியை சேர்தவர் சதீஷ் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

One comment

  1. Wenn Sie mir verraten, wie ich das mit bloß der Abspielleiste hinbekomme (d.h so, wie Sie es in Ihrem Blog haben). Wenn ich auf &#en8;ei7bett1n« klicke, dann habe ich immer einen ganzen Videokasten — was bei einem richtigen Videolink ja schön ist, aber bei reiner Musik eher störend.

Your email address will not be published.

Scroll To Top