கத்தியால் குத்தி, துப்பாக்கியால் சுட்டு இங்கிலாந்தில் பெண் எம்.பி கொலை

ING

இங்கிலாந்தில் பெண் எம்.பி., ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு, துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில், லேபர் பார்ட்டியின் பேட்லி மற்றும் ஸ்பென் ஆகிய பகுதிகளுக்கான எம்.பி.,யாக ஜோ காக்ஸ் உள்ளார். தனது தொகுதிக்கு உட்பட்ட பிர்ஸ்டால் என்ற பகுதியில் ஜோ காக்ஸ் மற்றும் அவரது நண்பரை, மர்மநபர் ஒருவர் திடீரென கத்தியால் குத்தினார்.

இதில் படுகாயமடைந்த ஜோ காக்ஸை துப்பாக்கியால் சுட்டுவிட்டு மர்ம நபர் தப்பிவிட்டார். தகவலறிந்த போலீசார் ஜோ காக்ஸை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதிகளவு ரத்தம் வெளியேறியதால், பெண் எம்.பி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே ஜோ காக்ஸ் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே கொலை செய்யப்பட்ட எம்.பி., ஜோ காக்ஸூக்கு பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சிரியமக்கள் மீதான படுகொலை தாக்குதலுக்கு எதிராக பிரச்சாரம் செய்தவர். குழந்தைப் பேறின்போது ஏற்படும் இறப்புத் தொடர்ரபாக விளிப்புணர்வை கொண்டுவர உழைத்தவர். தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர். பற்பசை தொழிற்சாலையில் வேலை செய்த ஒரு தொழிலாழிக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்து பாராளுமன்ற உறுப்பினராக வந்தவர். அகதிகளின் உரிமைக்கும் பாதுகாப்புக்கும் பாடுபட்டவர். பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்க வேண்டும் என்று பிரச்சாரம் மேற்கொண்டவர். என்பது  குறிப்பிடதக்கது


கருத்துக்களை பகிர


அல்லது

One comment

  1. God is SO good! Drnst+camfiah+fire+drive=blessiegs! U deserve each that comes ur way! Much love, respect & humbled pride 4 such honorable determination. U will soon reap all u’ve sown. Continue 2 appreciate each step w/an attitude of gratitude. (UGT!)

Your email address will not be published.

Scroll To Top