இந்தோனேசியக் கடற்கரையில் தவிக்கும் ஈழத்தமிழர்களை மோடி காப்பாற்றவேண்டும் – வைகோ

இந்தோனேசியக் கடற்கரையில் சிக்கி தவிக்கும் ஈழத்தமிழர்களை காப்பாற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

201605041013026628_Vaiko-3rd-phase-election-campaign-in-11-days_SECVPF

 

இதுகுறித்து அவர் பிரதமருக்கு எழுதியுள்ள மின் அஞ்சல் கடிதத்தில் கடிதத்தில், கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போரின் போது ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும் போர் முடிந்த பின்னரும் துன்பமும் துயரமும் வடக்கு கிழக்கு மாகாண தமிழர்களை வாட்டி வதைப்பதாகவும் கூறியுள்ளார்.

இலங்கையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமல் போயிருப்பதாகவும், பல்லாயிரக்கணக்கானோர் ராணுவ முகாம்களில் வாடுவதாகவும் குறிப்பிட்டுள்ள வைகோ வெளிநாடு சென்றாவது துன்பத்தில் இருந்து விடுபடலாம் என்கிற நோக்கில் ஆஸ்திரேலியா சென்ற தமிழர்களின் படகு பழுதாகி அவர்கள் இந்தோனேசிய கடற்கரையில் சிக்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்தோனேசிய அரசு அவர்களை தங்கள் நாட்டிற்குள் இறங்குவதற்கு அனுமதிக்காததால் வாழ்வா? சாவா? என புரியாமல் இலங்கைத் தமிழர்கள் கண்ணீரில் தத்தளிப்பதாக கூறியுள்ளார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top