கருப்புப் பணம் விரைவில் மீட்கப்படும்: ராம்விலாஸ் பாஸ்வான்

Ram-Vilas-paswan-PTI

வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணம் விரைவில் நாட்டுக்கு திரும்பக் கொண்டு வரப்படும் என்று மத்திய உணவு, பொது விநியோகத் துறை அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலம், மேதினிநகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

மத்தியில் ஆட்சி செய்யும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, சமூகநீதி கொள்கைகளின்படி பணியாற்றுவதற்கு உறுதிபூண்டுள்ளது. வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணம் விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும்.

கடந்த 2 ஆண்டுகால தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் எந்த மத்திய அமைச்சருக்கு எதிராகவும் ஊழல் புகார் எழவில்லை. இதுவே மிகப் பெரிய சாதனையாகும் என்றார் பாஸ்வான்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top