சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்த  இந்திய அணி முதன்முறையாக வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.

Champions-Trophy_SECVPFகவுரவமிக்க ஆக்கி போட்டிகளில் சாம்பியன்ஸ் கோப்பையும் ஒன்று. 6 முன்னணி அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி லண்டனில் கடந்த 10-ந்தேதி தொடங்கியது. இதில் கடைசிகட்ட லீக் ஆட்டங்களில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் புகுந்த இந்திய அணி உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவிடம் 2-4 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது.

இதையடுத்து இங்கிலாந்து-பெல்ஜியம் இடையிலான ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தால் மட்டுமே இந்திய அணிக்கு இறுதிசுற்று வாய்ப்பு கிடைக்கும் என்ற சூழலில், அதிர்ஷ்டக்காற்று இந்தியா பக்கமே வீசியது. பரபரப்பான இங்கிலாந்து-பெல்ஜியம் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

ஒரு கட்டத்தில் 1-3 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த இங்கிலாந்து அணி கடைசி 3 மூன்று நிமிடங்களில் அடுத்தடுத்து இரு கோல்கள் போட்டு பெல்ஜியத்தின் கனவை கலைத்தது. லீக் முடிவில் முதல் இரு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா (4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 13 புள்ளி), இந்தியா (2 வெற்றி, ஒரு டிரா, 2 தோல்வியுடன் 7 புள்ளி) ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இதையடுத்து, 13 முறை சாம்பியனான பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி நேற்று இறுதிப்போட்டியில் மோதியது.

லண்டன் : சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்திய அணி முதன்முறையாக வெள்ளிப் பதக்கம் வென்றது. பைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. லண்டனில், ஆண்களுக்கான 36வது சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடந்தது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், தென் கொரியா என 6 அணிகள் பங்கேற்றன. இதன் பைனலில் ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதின.

ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காததால், ‘பெனால்டி சூட் அவுட்’ முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்திய அணி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இதன்மூலம் இத்தொடரில் முதன்முறையாக வெள்ளிப் பதக்கம் வென்றது.

இந்திய அணி கடைசியாக கடந்த 1982-ம் ஆண்டு நெதர்லாந்தில் நடந்த தொடரில் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. இந்த தொடரின் பைனலில் வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலியா, 14வது முறையாக கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top