எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.

மருத்துவ தரிவரிசை பட்டியலில் 3 பேர் முதலிடம் பிடித்துள்ளனர் என மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. முதலிடத்தை கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதித்யா மகேசும், 2வது இடத்தை ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேசும், 3வது இடத்தை விஜயவாடாவைச் சேர்ந்த ஜெய ஞானவேலும் பிடித்துள்ளனர்.

தரவரிசை பட்டியல் குறித்த விபரங்களை www.tnhealth.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.   நடப்பாண்டில் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., தனியார் மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகளில் 2723 இடங்கள் உள்ளன. பிடிஎஸ் படிப்பிற்கு 1055 இடங்கள் உள்ளன.

2 இஎஸ்ஐ மருத்துவ கல்லூரிகளுக்கான 130 இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதுவரை மருத்துவ கவுன்சிலிங்கிற்கு 27, 450 பேர் விண்ணப்பித்துள்ளனர். மருத்துவ கவுன்சிலிங் ஜூன் 20 ம் தேதி துவங்க உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top