சட்டப்பேரவையில் கருணாநிதிக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்

stalinதமிழக சட்டப்பேரவை இன்று கூடியதும் மறைந்த உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவை ஒத்திவைப்பு செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

மேலும், சட்டப்பேரவை ஜூன் 20ம் தேதி திங்கட்கிழமை மீண்டும் கூடுகிறது என்று சபாநாயகர் தனபால் கூறினார். இதைதொடர்ந்து.. சட்டப்பேரவை வளாகத்தில் இன்று எதிர்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேரவையில் கருணாநிதிக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படாததற்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும் 89 உறுப்பினர்களைக் கொண்ட திமுகவிற்கு முறையாக இருக்கைகளை ஒதுக்க வலியுறுத்தியுள்ளதாகவும் கூறினார். சட்டசபையில் திமுக சார்பில் பேச 3 பேருக்கு அனுமதி கேட்டதாகவும், ஆனால் 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தங்களது கோரிக்கைகளை சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளதாகவும், தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top