குல்பர்க் சொசைட்டி கொலை வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு வன்முறை சம்பங்கள் அரங்கேறியது.

இந்த வன்முறை சம்பவங்களில் ஒன்றாக தலைநகர் அகமதாபாத் அருகே உள்ள குல்பர்க் வீட்டுவசதி சொசைட்டி குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் மீது ஒரு கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியதுடன், அந்த கட்டிடத்துக்கும் தீ வைத்தது. இதில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரி உள்பட 69 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 66 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது அகமதாபாத்தில் உள்ள சிறப்பு செசன்சு கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.

இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் கடந்த 2-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது விஷ்வ இந்து பரிஷத் தலைவர் அதுல் வைத்யா உள்பட 24 பேரை குற்றவாளிகள் எனவும், பா.ஜனதா நகரசபை உறுப்பினர் பிபின் படல் உள்பட 36 பேரை விடுவித்தும் நீதிபதி பி.பி.தேசாய் தீர்ப்பளித்தார். 6 பேர் விசாரணை காலத்திலேயே இறந்துவிட்டனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் 24 பேருக்குமான தண்டனை குறித்த விவாதம் நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தது.

குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் 17-ம் தேதி இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குற்றவாளிகளில் 11 பேருக்கு இறக்கும்வரை ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டையும், மேலும் 12 பேருக்கு தலா ஏழாண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top