தோனி விக்கெட் கீப்பிங்கில் புதிய சாதனை படைத்தார்

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி, 350 பேரை அவுட் செய்த முதல் இந்திய கீப்பர் என்ற சாதனை படைத்துள்ளார்.

DONI

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 33-வது ஓவரை பூம்ரா வீசியபோது, தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.  இதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில், 350 அவுட்களை செய்த முதல் இந்திய கீப்பர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார்.

இதுவரை 278 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள மகேந்திர சிங் தோனி, 261 கேட்ச் மற்றும் 89 ஸ்டம்ப்பிங் செய்துள்ளார். அதேசமயம், அதிக விக்கெட்  எடுத்த  கீப்பர் பட்டியலில், குமார சங்ககாரா (482 அவுட்) முதலிடத்திலும், ஆடம் கில்கிறிஸ்ட் (472 அவுட்) மற்றும் மார்க் பவுச்சர் (424 அவுட்) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

அதேபோல், நேற்றைய வெற்றியின் மூலம் கேப்டனாக இருந்து தோனி பெற்ற 105- வது வெற்றியாகும். இதன் மூலம் அதிக வெற்றிகளை பெற்றவர்கள் இடத்தில் ஆலன் பார்டருடன்(ஆஸ்திரேலியா) இணைந்து இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த பட்டியலில் 165 வெற்றிகளை பெற்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் முதலிடத்தில் உள்ளார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top