யூரோ கோப்பை:ரஷியாவை வீழ்த்தியது ஸ்லோவாக்கியா

Russia-Slovakia-qualify-for-Euro-2016-England-win

யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஸ்லோவாக்கியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ரஷியாவைத் தோற்கடித்தது.

பிரான்ஸின் லில்லே நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெரும்பாலான நேரங்களில் ரஷிய அணியின் வசமே பந்து இருந்தது. அதேநேரத்தில் ஸ்லோவாக்கிய அணி தங்கள் வசம் பந்து வரும்போதெல்லாம் அதை கோலாக மாற்ற முயற்சித்தது. 32-ஆவது நிமிடத்தில் ஸ்லோவாக்கிய வீரர் மரேக் ஹாம்சிக் வசம் பந்து செல்ல, அவர் விளாதிமிர் வியெஸுக்கு பந்தை கடத்தினார். அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட வியெஸ் கோலடிக்க, ஸ்லோவாக்கியா 1-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து அபாரமாக ஆடிய ஹாம்சிக், முதல் பாதி ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் கோலடிக்க, ஸ்லோவாக்கியா 2-0 என முன்னிலை பெற்றது. இதனால் கடும் நெருக்கடிக்குள்ளான ரஷியா, 2-ஆவது பாதி ஆட்டத்தில் கோலடிக்க தீவிரம் காட்டியது. அதற்கு 80-ஆவது நிமிடத்தில் பலன் கிடைத்தது. மாற்று வீரராக களமிறங்கிய குளுஷாக்கோவ் கோலடித்தார். எனினும் அந்த அணியால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டதன் மூலம் ஸ்லோவாக்கியா அணி அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. அதேநேரத்தில் இதுவரை ஒரு புள்ளியை மட்டுமே பெற்றுள்ள ரஷிய அணி, அடுத்த ஆட்டத்தில் வேல்ஸ் அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

போர்ச்சுகல்-ஐஸ்லாந்து டிரா: மற்றொரு ஆட்டத்தில் கத்துக்குட்டி அணியான ஐஸ்லாந்து, வலுவான அணியான போர்ச்சுகலுடன் (1-1) டிரா செய்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top