பிரதமர் மோடி காலில் விழுந்து பரபரப்பை ஏற்படுத்திய அலஹாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி

allahabad-high-court-judge-falls-at-modi-s-feet (1)

அலஹாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஒருவர் பிரதமர் மோடி காலில் விழுந்தது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அலஹாபாத் உயர்நீதிமன்றம் செயல்படத் தொடங்கி 150 வருடத்தை எட்டியுள்ளது. அதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளை குடியரசு தலைவர் பிரணாப் முக்கர்ஜி கடந்த 13 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதனை அடுத்து அலஹாபாதில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்களை சந்திக்க சென்ற பிரதமர் மோடி உயர் நீதிமன்றத்தில் தேநீர் விருந்துக்கு சென்றார்.

அங்கு இருந்த மற்றொரு நீதிபதியின் கூற்றுப்படி, பிரதமர் மோடியுடன் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள மிகப்பெரிய போட்டி இருந்ததாகவும், அவர்களுடன் மோடி படங்களை எடுத்துக் கொண்டார் என்றும் தெரிகிறது.

முன்னர் ஒரு முறை முன்னாள் தலைமை நீதிபதி ஒருவர் உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தில் அந்த மாநிலத்தின் முதலமைச்சர் காலை தொட்டு கும்பிட்ட நிகழ்வு மிகப்பெரிய அளவில் சர்ச்சையையும், எதிர்ப்பையும் சந்தித்தது.

தற்போது நீதித்துறையை சேர்ந்த ஒரு நீதிபதி ஒரு பிரதமரின் காலில் விழுந்தது மிகப்பெரிய அளவில் எதிர்ப்பை எதிர்கொண்டு வருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top