தோனி மற்றும் சீனிவாசன் வாக்குமூலத்தை கேட்டு பிசிசிஐ புதிய மனு!

dhoni with srinivasanஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் என்.சீனிவாசன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் வாக்குமூலத்தை எழுத்துப்பூர்வமாக அளிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பிசிசிஐ புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

6வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சூதாட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பாக விசாரிக்க நீதிபதி முட்கல் தலைமையில் குழு ஒன்றை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இந்த குழு ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பாக விசாரணை செய்து உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை அளித்தது.

இந்நிலையில், ஐ.பி.எல். சூதாட்ட விசாரணையை மேற்கொண்ட நீதிபதி முட்கல் கமிட்டியிடம், பி.சி.சி.ஐ தலைவர் ஸ்ரீனிவாசன், சென்னை சூப்பர் சிங்ஸ் அணி கேப்டன் தோனி மற்றும் ஐ.பி.எல் இயக்க அதிகாரி சுந்தர் ராமன் ஆகியோர் கூறியதன் ஆடியோ டேப்பை  கேட்டு பி.சி.சி.ஐ உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த ஆடியோ பதிவு கிடைத்தால்தான் வரும் 16ஆம் தேதி இந்த வழக்கில் வாதாட தயார்படுத்தி கொள்ள முடியும் என்றும் பிசிசிஐ வழக்கறிஞர் கூறியதை அடுத்து  உச்ச நீதிமன்றம் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுள்ளது.இந்த மனு மீதான விசாரணை வரும் 11ஆம் தேதி நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top