பாலஸ்தீனத்தின் கடும் எதிர்ப்புக்கு இடையே ஐ.நா.வுக்கான சட்டக்குழு தலைமைக்கு முதன்முறையாக இஸ்ரேல் தேர்வு

பாலஸ்தீனத்தின் கடும் எதிர்ப்புக்கு இடையே ஐக்கிய நாடுகள் சபை சட்டக்குழுவின் தலைமை பொறுப்புக்கு ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

israel

பாலஸ்தீனத்தின் கடும் எதிர்ப்புக்கு இடையே ஐக்கிய நாடுகள் சபை சட்டக்குழுவின் தலைமை பொறுப்புக்கு ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையில் பல பிரிவுகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஆயுதங்கள் குறைப்பு, மனித உரிமைகள், பொருளாதாரம் மற்றும் நிதி விவகாரங்கள், அடிமைத்தனம் ஒழிப்பு, ஐக்கிய நாடுகள் சபைக்கான வரவு-செலவு நிர்வாகம் ஆகியவற்றை கவனிக்கும் நிலைக்குழுவின் நிர்வாகத்தினர் ஐக்கிய நாடுகள் சபையின் சட்டக்குழுவிடம் தங்களது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இந்த சட்டக்குழு ஆறாவது குழு என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த சட்டக்குழுவின் தலைமை பொறுப்புக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. மேற்கு ஐரோப்பா மற்றும் இதர நாடுகள் குழு சார்பாக இந்த தேர்தலில் இஸ்ரேல், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகள் போட்டியிட்டன. 193 நாடுகளை உள்ளடக்கிய ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் 175 நாடுகள் இந்த தேர்தலில் வாக்களித்தன. இதில் 109 வாக்குகளை பெற்ற இஸ்ரேல் தலைமை பொறுப்புக்கு தேர்வாகியுள்ளது.

இதையடுத்து, ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேல் தூதர் டான்னி டானன் ஐ.நா. சட்டக்குழுவின் தலைவராக பொறுப்பேற்று கொள்வார். இந்த தேர்வு தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், சர்வதேச சட்டங்களை பேணுவதிலும் தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதிலும் இஸ்ரேல் உலகின் தலைமை நாடாக உள்ளது.

இந்த பதவிக்கு தேர்நெடுக்கப்பட்ட முதல் இஸ்ரேலிய குடிமகன் என்ற வகையில் நான் பெருமை கொள்கிறேன். எங்களது அனுபவத்தையும், ஞானத்தையும் உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top