எத்தியோப்பியா எல்லையை தாக்கியுள்ளதாக எரித்திரியா குற்றச்சாட்டு

eritrea_security_512x288_bbc_nocredit

எத்தியோப்பியா தன்னுடைய கடும் இராணுவ மயமான எல்லையை தாக்கியுள்ளதாக எரித்திரியா குற்றஞ்சாட்டியுள்ளது. பயங்கர துப்பாக்கி சூடு சத்தத்தை கேட்டதாகவும், எத்தியோப்பிய படைப்பிரிவுகளும், பீரங்கிகளும் நடமாடுவதை பார்த்த்தாகவும் எல்லையில் அமைந்திருக்கும் பிராந்தியமான சோரோனா குடியிருப்புவாசிகள் கூறியுள்ளனர்.

சண்டைகள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று எத்தியோப்பிய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கிடையில் இரண்டு ஆண்டுகள் நடைபெற்று, 2000 ஆம் ஆண்டு முடிவுற்ற எல்லை மோதல்களில் குறைந்த்து 100 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். எல்லை நெடுகிலான சர்ச்சைக்குரிய பகுதி எரித்திரியாவை சேர்ந்தது என்று ஐநா ஆணையம் ஒன்று தெரிவித்தது, ஆனால், எத்தியோப்பியா அந்த முடிவை ஒருபோதும் ஏற்கவில்லை.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top