புளோரிடா துப்பாக்கிச் சூடு அதிர்ச்சி அளிக்கிறது: பிரதமர் மோடி கருத்து

modi_fb__large

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதியில் நேற்று மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர். 53 பேர் காயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு உலகத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், ஓரின சேர்க்கையாளர் விடுதியில் நடந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும், இறந்தவர்களின் குடும்பங்கள் இந்த துயரங்களில் இருந்து மீண்டு வரவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டிக்கொள்வதாக கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top