டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான ஆடுகளங்களின் தரம் குறித்து ஐசிசி கிரிக்கெட் கமிட்டி கவலை

Anil-Kumble

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான ஆடுகளங்களின் தரம் குறித்தும், அது உள்ளூர் அணிக்கு சாதகமாக தயாரிக்கப்படுவது குறித்தும் அனில் கும்ப்ளே தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் கமிட்டி கவலை தெரிவித்துள்ளது.

லண்டனில் கூடிய இந்த கமிட்டி டெஸ்ட் கிரிக்கெட் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தது. அப்போது டெஸ்ட் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை என கமிட்டி உறுப்பினர்கள் தெரிவித்தனர். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான ஆடுகங்களின் தரம் குறித்தும், போட்டியை நடத்தும் நாடு வெற்றி பெறும் வகையில் ஆடுகளங்கள் தயாரிக்கப்பட்டு வருவது குறித்தும் ஐசிசி கிரிக்கெட் கமிட்டி கவலை தெரிவித்தது.

ஐசிசி கிரிக்கெட் கமிட்டியில் இடம்பெற்றுள்ள மற்றொரு முக்கிய நபரான ராகுல் திராவிடும் கடந்த ஆண்டு நடைபெற்ற ரஞ்சி கிரிக்கெட் தொடரின்போது தயாரிக்கப்பட்டிருந்த ஆடுகளங்கள் குறித்து கவலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விறுவிறுப்பை ஏற்படுத்தி சிறப்பான முறையில் நடத்துவதற்கான முன்மொழிவை ஐசிசியிடம் இருந்து பெற்றிருக்கிறது கும்ப்ளே தலைமையிலான கிரிக்கெட் கமிட்டி. சர்வதேச கிரிக்கெட்டில் தற்போதுள்ள நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என ஐசிசி கிரிக்கெட் கமிட்டி உறுப்பினர்கள் ஒரு மனதாக முடிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு நாகபுரியில் நடைபெற்ற இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டி ஆடுகளம் மோசமாக இருந்ததன் காரணமாக இரண்டரை நாள்களிலேயே முடிவுக்கு வந்தது. இதையடுத்து அந்த ஆடுகளம் ஐசிசியின் எச்சரிப்புக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

பகலிரவு டெஸ்ட் போட்டியை வெற்றிகரமானதாக்க வேண்டும் என்றால் டெஸ்ட் விளையாடும் அனைத்து நாடுகளிலும் தொடர்ச்சியாக போட்டியை நடத்த வேண்டும். பேட்ஸ்மேன், பெளலர் என இரு தரப்புக்கும் சமமான போட்டியை உருவாக்கும் வகையில் பந்து, ஆடுகளம், மின்விளக்கு ஆகியவற்றை சீராக அமைக்க வேண்டும் என கிரிக்கெட் கமிட்டி தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top