காட்சிகளை வெட்டுவதல்ல தணிக்கை குழுவின் வேலை சான்றிதழ் அளிப்பதுதான் அவர்களது கடமை

MLLகாட்சிகளுக்கு ‘கத்திரி போடாமல்’ திரைப்படங்களுக்கு சான்றிதழ் அளிக்கும்படி மத்திய அரசிடம் பரிந்துரைத்திருப்பதாக திரைப்பட தணிக்கை வாரிய சீரமைப்பு குழு உறுப்பினர் கவுதம் கோஷ் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருட்களுக்கு இளம் தலைமுறையினர் எப்படி அடிமையாகின்றனர் என்ற கருவை மையமாக கொண்டு உருவான ‘உட்தா பஞ்சாப்’ திரைப்படத்தின் 89 காட்சிகளை வெட்டுவதற்கு திரைப்பட தணிக்கை வாரிய குழு உத்தரவிட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த திரைப்படக் குழுவினர் தணிக்கை குழுவுக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் தணிக்கை வாரியத்தின் உத்தரவு நகலை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதி மன்றம் சான்றிதழ் வழங்கும் பணியை மட்டும் மேற்கொள்ளும் படி தெரிவித்து தணிக்கை வாரியத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.

இதனால் நாடு முழுவதும் தணிக்கை வாரியத்துக்கு எதிராக கோஷங்கள் எழுந்து வருகின் றன. இந்த சூழலில் தணிக்கை செய்யும் முறையை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டிருப்பதாக தணிக்கை வாரிய சீரமைப்பு குழு உறுப்பினர் கவுதம் கோஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கொல்கத்தாவில் நேற்று அவர் கூறியதாவது:

தற்போதுள்ள நிலைமையை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பிரச் சினைக்கு தீர்வு காண தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லியும் முன்வந்துள்ளார். தணிக்கை வாரிய உறுப்பினராக இருப்பதால் முழு விவரங்களையும் என்னால் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க முடியாது. அதே சமயம் எதிர்காலத்தில் ‘கத்திரி போடா மல்’ திரைப்படங்களுக்கு சான்றி தழ் வழங்கும்படி அமைச்சகத் துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். காட்சிகள் வெட்டப் படாமல் திரைப்படங்கள் வெளியா வது என்பது மிகப் பெரிய விஷய மாகும். இதற்கான பரிந்துரை அறிக்கையை தணிக்கை வாரிய சீரமைப்பு குழு உறுப்பினர் ஷ்யாம் பெனேகல் மத்திய அரசிடம் சமர்பித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

திரைப்பட தணிக்கை விவகாரம் மற்றும் சான்றிதழ் அளிக்கும் முறைகள் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கடந்த வியாழக்கிழமை ஜேட்லி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top