டொனால்டு டிரம்பை நேரில் சந்தித்து எச்சரிக்கப் போவதாக அயர்லாந்து பிரதமர் பேச்சு

Trump-to-tell-his-views-are-racist-Irish-PM_SECVPFஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள டொனால்டு டிரம்ப் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதற்கு பன்னாட்டு தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இனவாத கருத்துக்களை தெரிவித்து வரும் டிரம்ப்பை நேரில் சந்தித்து அவரது நடவடிக்கைகள் சரியல்ல என எச்சரிக்க உள்ளதாக அயர்லாந்து நாட்டு பிரதமர் எண்டா கென்னி தெரிவித்துள்ளார்.

டிரம்ப் தனது பிரசாரத்தில் கூறி வரும் இனவாத மற்றும் ஆபத்தான கருத்துக்களை அயர்லாந்து பாராளுமன்றம் கடந்த சில வாரங்களாகவே உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், வாய்ப்பு கிடைத்தால் இம்மாத இறுதியிலேயே டிரம்பை நேரில் சந்தித்து அவரது கருத்துக்களை தவறானது என கூறப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top