ஏழுவர் விடுதலைக்காக நடைபெறும் பேரணியில் திரளாய் பங்கெடுப்போம் திருமா

ஏழு தமிழர் விடுதலைக்கான கூட்டியக்கம்’ சார்பில், ஜூன் 11, 2016 அன்று வேலூர் சிறை அருகில் தொடங்கி சென்னை கோட்டை நோக்கி நடைபெறவுள்ள மாபெரும் வாகனப் பேரணிக்கு  பெரும்  ஆதரவு  கிடைத்து  வருகிறது ,திரைப்பட  இயக்குனர்கள்   நடிகர்கள் ஆதரவு  பேட்டி கொடுத்து இருந்தனர்  இன்று  விடுதலை  சிறுத்தைகள்  தலைவர்  திருமாவளவன்  இது குறித்து  வெளியிட்டுள்ள அறிக்கையில்

கடந்த 25 ஆண்டுகளாக சிறைச்சாலையில் வாடிவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு தமிழரை விடுதலை செய்யக்கோரி, ‘ஏழு தமிழர் விடுதலைக்கான கூட்டியக்கம்’ சார்பில், ஜூன் 11, 2016 அன்று வேலூர் சிறை அருகில் தொடங்கி சென்னை கோட்டை நோக்கி நடைபெறவுள்ள மாபெரும் வாகனப் பேரணியில் விடுதலைச் சிறுத்தைகளும் பங்கேற்கிறது!

ஏழு தமிழர் விடுதலை என்பது விடுதலைச் சிறுத்தைகளின் நீண்டநாள் கோரிக்கையாகும். அதற்காக நடைபெற்ற அத்தனை போராட்டங்களையும் விசிக ஆதரித்து பங்கேற்று வந்துள்ளது. அந்த வகையில் இந்த அறப்போராட்டத்தையும் ஆதரிக்கிறது.

இப்போராட்டத்தில் குறிப்பாக, வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை மவட்டங்களைச் சார்ந்த

விடுதலைச் சிறுத்தைகள் பெருவாரியாகப் பங்கேற்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்ட பின்னரும், அதை பொருட்படுத்தாமல், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மாறாக மத்திய அரசு நடந்து வருகிறது.

ஏழு தமிழரையும் விடுதலை செய்வதற்கான அறிவிப்பை தமிழக அரசு செய்த பிறகும், அவர்கள் விடுதலை செய்யப்படாமல் இருப்பது அநீதியாகும். மத்திய அரசின் இத்தகைய தமிழர் விரோதப் போக்கை கண்டித்தும், ஏழு தமிழரை விடுவிக்க வலியுறுத்தியும் நடைபெறுகிற வாகனப் பேரணியில் பங்கேற்போம். என  தெரிவித்துள்ளார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top