பாகுபலி-2 புதிய அப்டேட்

Baahubali-movie-new-update_SECVPF

ஒட்டு மொத்த இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்திருக்கும் மிகப் பிரம்மாண்ட படம் ‘பாகுபலி-2’. இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, இந்தியா மட்டுமில்லாது உலக நாடுகளிலும் மிகப் பெரிய வசூலை வாரிக் குவித்தது. அதைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது, இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்புகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இதில், வரும் இறுதிக்கட்ட காட்சியை வருகிற ஜுன் 13-ந் தேதி படப்பிடிப்பு நடத்தப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து 70 நாட்கள் இந்த படப்பிடிப்பை நடத்தவிருக்கிறார்களாம்.

இந்த கிளைமாக்ஸ் காட்சியை மிகவும் பிரம்மாண்டமாக எடுக்க முடிவு செய்துள்ளார்களாம். இதற்காக, ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் சாபு சிரில் கைவண்ணத்தில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாம். ‘பாகுபலி-2’ வில் முந்தைய பாகத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் நடிக்கிறார்கள். மேலும், புதிய நடிகர்களும் இதில் சேர்க்கப்பட்டு நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top