மருத்துவ படிப்பில் சேர 26 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

மருத்துவ படிப்பில் சேர 26 ஆயிரம் மாணவ–மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

imagesதமிழ்நாட்டில் 20 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த வருடமும் வழக்கம்போல நுழைவுத்தேர்வு இன்றி கலந்தாய்வு நடைபெறுகிறது.

சுயநிதி மருத்துவ கல்லூரிகள் 6 உள்ளன. இந்த கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டுக்கு 470 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 290 இடங்களும் உண்டு.

சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகள் 17 இருக்கின்றன. அந்த கல்லூரிகளில் பி.டி.எஸ். படிப்பில் சேர மாநில ஒதுக்கீட்டில் 970 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 640 இடங்களும் உள்ளன.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர கடந்த மாதம் 26–ந் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நேற்று கடைசி நாள்.

மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் செல்வராஜ் கூறுகையில், மருத்துவ படிப்புக்கு 343 விளையாட்டு வீரர்கள் (மாணவ–மாணவிகள்) விண்ணப்பித்துள்ளனர். 25 ஆயிரத்து 470 விண்ணப்ப படிவங்கள் வந்து சேர்ந்துள்ளன. தபால் மூலம் சேர்த்து மொத்தம் 26 ஆயிரம் மாணவ–மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர் என்றார்.

தரவரிசை பட்டியல் 14–ந் தேதி வெளியிடப்படும். மருத்துவ கட் ஆப் இந்த வருடம் கடந்த ஆண்டைவிட 0.5 குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் கட்ட மருத்துவ கலந்தாய்வு 20–ந் தேதி முதல் 25–ந் தேதி வரை நடைபெறுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top