ஜல்லிக்கட்டு தடையை ஆதரிப்பதா.. விஷால் கொடும்பாவியை எரித்து வீர விளையாட்டு மீட்புக் கழகம் போராட்டம்

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு தடையை ஆதரித்துப் பேசி வரும் விஷால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி திருச்சியில் தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகத்தினர் அவரது கொடும்பாவியை எதிர்த்துப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷாலுக்கு சமீபத்தில் Face of Animal Activism 2015 என்ற விருது விலங்குகள் நல அமைப்பால் கொடுக்கப்பட்டது. இந்த விருதினை கவர்னர் ரோசய்யா கையால் விஷால் பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஜல்லிக்கட்டு குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

அவரது பேச்சைக் கண்டித்து தமிழர் வீர விளையாட்டு கழகம் என்ற அமைப்பு போராட்டத்தில் குதித்துள்ளது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் விஷால் உருவப்பொம்மையை எரிக்க முயற்சி செய்தனர். திருச்சி கண்டோன்மென்ட் உதவி கமிஷனர் அசோக்குமார் தலைமையில் போலீஸார் அவர்களை தடுத்து கைது செய்தனர். விஷால் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என வீர விளையாட்டு சங்கம் அறிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top