பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரி ஜெயலலிதாவிடம் மனு கொடுப்போம்: அற்புதம்மாள் பேட்டி

Arputhammal-interview-perarivalan-including-7-people-release_SECVPF

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி  வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு எனது மகன் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகியோர் கடந்த 25 வருடங்களாக தனிமை சிறையில் அடைபட்டு உள்ளனர். 19 வயதில் சிறைக்கு சென்றது முதல் இன்று வரை என் மகன் ஒருமுறை கூட வெளியில் வரவில்லை. அவனது இளமை, வாழ்க்கை எல்லாமே சிறைக்குள் அடங்கி ஒடுங்கி விட்டது.

எனது மகன் உள்பட 7 பேரையும் தாயுள்ளத்தோடு விடுதலை செய்ய முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றினார். ஆனால் ஏனோ மத்திய அரசு இந்த விவகாரத்தில் பாராமுகமாகவே உள்ளது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானத்துக்கு மேலும் வலுசேர்க்கும் வகையிலும், நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் 11-ந் தேதி (சனிக்கிழமை) வேலூர் மத்திய சிறைச்சாலை வாசலில் இருந்து சென்னை கோட்டை நோக்கி மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த உள்ளோம். கோட்டையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம்.

அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள்-இயக்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மட்டுமல்லாமல் 7 பேருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று நினைக்கிற ஒவ்வொரு தனிமனிதனும் இந்த பேரணியில் பங்கேற்க வேண்டும். என் மகன் உள்பட 7 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top