கண்ஹையா குமாரைத் தாக்கிய மானஸ் டேகா அமித் ஷாவுடன் சந்திப்பு

jnu_student_kanhaiya_kumar__large

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் கண்ஹையா குமாரை விமானத்தில் தாக்கியதாக கூறப்படும் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரான மானஸ் டேகா, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்தார்.

மகாராஷ்டிர மாநிலம், புணேயில் கடந்த ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி தனியார் விமானத்தில் பயணம் செய்தபோது அஸ்ஸாமைச் சேர்ந்த இளைஞரான மானஸ் டேகா என்பவர் தன்னைத் தாக்கியதாக கன்னையா குமார் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

இதுதொடர்பாக மும்பை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், கன்னையா குமார் தெரிவித்த குற்றச்சாட்டு பொய் என்று போலீஸார் குறிப்பிட்டனர்.

இருப்பினும், சமூகவலைதளத்தில் கன்னையா குமார் வெளியிட்ட பதிவுகளில், மானஸ் டேகாவை பாஜகவின் தீவிர ஆதரவாளர் என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை புணேயில் நடைபெற்ற “திறன் மிகு இந்தியா’ (ஸ்கில் இந்தியா) தொடர்பான நிகழ்ச்சியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது அவரை மானஸ் டேகா தலைமையில் அஸ்ஸாமைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர் சந்தித்தனர். பின்னர் அமித் ஷாவுடன் சேர்ந்து கைப்படமும் (செல்ஃபி) எடுத்துக் கொண்டனர்.

அந்த புகைப்படத்தை மானஸ் டேகா தனது சமூகவலைதள பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.

மானஸ் டேகாவை பாஜகவின் ஆதரவாளர் என்று கன்னையா குமார் குற்றம்சாட்டி வந்த நிலையில், அதை நிரூபிக்கும் வகையில் அமித் ஷாவை மானஸ் டேகா சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top