தென்மேற்கு பருவ மழை இன்னும் சில நாட்களில் தொடங்கும்:வானிலை ஆய்வுமையம் தகவல்

ChennaiMeteorological(C)_8

தென்மேற்கு பருவமழை இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் “அக்னி நட்சத்திரம்’ முடிந்த பிறகும் கோடை வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து இருந்து வருகிறது. அதோடு, தமிழகம், புதுச்சேரியில் ஆங்காங்கே மழையும் பெய்து வருகிறது.

இந்நிலையில், தென்மேற்கு பருவமழை இன்னும் ஒரு வாரத்துக்குள் தொடங்க வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல, தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்னை, கரூர், வேலூர், திருச்சி, புதுச்சேரி உள்ளிட்ட வட, தென் மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக மதுரையில் 102 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. அதற்கு அடுத்தபடியாக பாளையங்கோட்டையில் 101 டிகிரி வெயில் பதிவானது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை ஒரிரு நாள்களில் தொடங்க உள்ளது. அதைத்தொடர்ந்து, தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 7 நாளுக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வானிலை முன்னறிவிப்பு: சென்னையைப் பொருத்தவரையில் திங்கள்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பச் சலனம் இல்லை. நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புண்டு. அதேபோல, புதுச்சேரியில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top