முத்தரப்புத் தொடர்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது மே.இ.தீவுகள்

spt2
முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்தது மேற்கிந்தியத் தீவுகள்.

ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்புத் தொடர் மேற்கிந்தியத் தீவுகளின் கயானாவில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும், மேற்கிந்தியத் தீவுகளும் மோதின.

இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி, மேற்கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 46.5 ஓவர்களில் 188 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ரிலீ ரொசாவ் 61 ரன்களும், கேப்டன் டிவில்லியர்ஸ் 31 ரன்களும் எடுத்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் சுநீல் நரேன் 9.5 ஓவர்களில் 27 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பின்னர் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 48.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக கிரண் போலார்ட் ஆட்டமிழக்காமல் 67 ரன்கள் குவித்தார்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஆரோன் பங்கிசோ 3 விக்கெட்டுகளையும், இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சுநீல் நரேன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top