தேசிய ஜூனியர் கூடைப்பந்து போட்டி: தமிழக ஆண்கள் அணி ‘சாம்பியன்

basket-ball_SECVPF

புதுச்சேரி மாநில கூடைப்பந்து சங்கம் சார்பில் உப்பளம் ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் 67-வது தேசிய ஜூனியர் கூடைப்பந்து ‘சாம்பியன் ஷிப்’ போட்டி நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் 26 மாநிலங்களை சேர்ந்த அணியினரும், பெண்கள் பிரிவில் 22 மாநிலங்களை சேர்ந்த அணியினரும் கலந்து கொண்டனர். இதன் ஆண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு-கேரளா அணிகள் மோதின. இதில் தமிழக அணி 88-77 என்ற புள்ளி கணக்கில் கேரளாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. பெண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் கர்நாடகம்-தமிழ்நாடு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் கர்நாடக அணி 64-44 என்ற புள்ளி கணக்கில் தமிழகத்தை சாய்த்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top