எதிரிக்கட்சியாக அல்லாமல் எதிர்க்கட்சியாகவே செயல்படுவோம்: ஸ்டாலின்

stalin

89 உறுப்பினர்களைக் கொண்ட திமுக எதிர்க்கட்சியாக செயல்படுமே தவிர எதிரிக்கட்சியாக செயல்படாது என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தமிழக சட்டப்பேரவைத் தலைவராக ப.தனபால் தொடர்ந்து 2-வது முறையாக பதவியேற்றார். துணைத் தலைவராக பொள்ளாச்சி ஜெயராமன் பதவியேற்றார்.

சபாநாயகராக பதவியேற்றுக் கொண்ட தனபாலை, அதிமுக அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வமும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் இருக்கையில் அமர வைத்தனர். சபாநாயகருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் பேசிய ஸ்டாலின், “89 உறுப்பினர்களைக் கொண்ட திமுக எதிர்க்கட்சியாக செயல்படுமே தவிர எதிரிக்கட்சியாக செயல்படாது. சட்டப்பேரவையில் திமுக ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும்” என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top