இயக்குநர் – நடிகர் பாலு ஆனந்த் மாரடைப்பால் மரணம்

Balu-Anand

இயக்குநர் – நடிகர் பாலு ஆனந்த் மாரடைப்பால் மரணம் அடைந்தார். பல ஆயிரம் ரசிகர்கள் இன்றும் ரசிக்கும் விஜயகாந்த் நடித்த நானே ராஜா நானே மந்திரி படத்தை இயக்கியவர் பாலு ஆனந்த். சத்யராஜ் நடித்த அண்ணாநகர் முதல் தெரு படத்தையும் இவர்தான் இயக்கினார்.

ரசிகன் ஒரு ரசிகை, உனக்காகப் பிறந்தேன், பொட்டுவச்ச நேரம், ராஜாதிராஜ ராஜமார்த்தாண்ட காத்தவராயன், சிந்துபாத் போன்ற படங்களும் இவர் இயக்கியதுதான். கடைசியாக பவர்ஸ்டார் சீனிவாசனை வைத்து ஆனந்த தொல்லை என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் உள்ளது.  Buy Tickets இவர் இயக்குநராக அறியப்பட்டதை விட நடிகராகத்தான் பலருக்கும் தெரியும். முழு நேர நடிகராக மாறிய அவர், வானத்தைப் போல உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை, வில்லன், குணச்சித்திர நடிகராக நடித்தார்.

பாலு ஆனந்துக்கு சொந்த ஊர் கோவை. இயக்குநர் ஆர் சுந்தர்ராஜனிடம் பயணங்கள் முடிவதில்லை படம் தொடங்கி 28 படங்களில் உதவியாளராக இருந்து பின்னர் இயக்குநரானார். சொந்த ஊரிலிருந்த பாலு ஆனந்துக்கு இன்று அதிகாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனை செல்லும்போதே அவர் உயிர் பிரிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பாலு ஆனந்த் மரணம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top