கருப்பு பணம் விசயத்தில் விமர்சனங்களை ஊக்கமாக எடுத்து கொள்வேன்:அமிதாப்பச்சன்

amitabh

‘‘விமர்சனங்களை கண்டு வெட்கப்பட்டு விலகி போவதை விட்டு, அதனை ஊக்கமாக எடுத்து கொள்வேன்’’ என்று நடிகர் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கி வைத்திருக்கும் பிரபலங்களின் பட்டியலில், நடிகர் அமிதாப்பச்சனின் பெயரும் இடம்பெற்று சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், அவருக்கு எதிராக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில், மும்பையில் நடிகர் அமிதாப்பச்சன், நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது, அவர் கூறியதாவது:–

எங்களை பொறுத்தவரையில், விமர்சனம் என்பது மிகவும் முக்கியமானது. ஏனென்றால், அது தான் நம்மை மேம்படுத்த உதவிகரமாக இருக்கும். ஆனாலும், விமர்சனங்களை நான் திரும்பி பார்ப்பதில்லை. அதனை கண்டு வெட்கி விலகி போவதை விட்டு, அதனை ஊக்கமாக எடுத்து கொண்டு முன்னோக்கி செல்வேன்.

இங்கு யாருமே சரியானவர்கள் கிடையாது. எல்லாரிடமும் குற்றம், குறை இருக்கத்தான் செய்கிறது. அவற்றை எல்லாம் கவனிக்க நமக்கு திறனில்லை. ஒரு பிரபலமாக, அனைத்தையும் சந்தித்தே தீர வேண்டும். அதை சரிசெய்ய வேண்டும்.

பொதுமக்களின் அன்பினால் மகிழ்ச்சி அடையும் ஒரு பிரபலம், எதிர்மறை விஷயங்களை சந்திக்கவும் தயாராக இருக்க வேண்டும். ரசிகர்கள் நம்மை புகழும்போது, அதனை நலமானதாக எடுத்து கொள்கிறோம். அதேசமயம், அவர்கள் நம்மை விமர்சித்து நம் மீது செங்கல் கட்டிகளை வீசும்போது, ‘வீசாதீர்கள்’ என்று சொல்கிறோம். இது சரியானது அல்ல.

உன்னுடைய படம் வெற்றி பெறவில்லை என்றால், அதற்கான விமர்சனங்களை சுவரில் வைத்து விட்டு ‘நான் இன்னும் கடினமாக உழைப்பேன். என்னுடைய திறமையை நிரூபிப்பேன்’ என்று அதை பார்த்து சொல் என என்னுடைய மகன் அபிஷேக் பச்சனுக்கு ஆலோசனை கூறுவேன்.

ஒவ்வொரு நாளும் உங்களது பணி, ஆடை அணியும் பழக்கம், பேச்சு வழக்கம், திரைப்படங்களில் உங்களது பங்களிப்பு ஆகியவை தொடர்பாக விமர்சனம் எழத்தான் செய்யும். இது மக்களுக்கான தனியுரிமை.

இவ்வாறு அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top