ஓ. பன்னீர் செல்வத்துக்கு எதிரான பிரச்சாரத்தின்போது கைது செய்யப்பட்ட அணுஉலை எதிர்ப்பாளர் முகிலன் பிணையில் விடுதலை

நியூட்ரினோ திட்டத்துக்கு மறைமுக ஆதரவு கொடுத்த அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்துக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்ட தோழர் முகிலன் பிணையில் விடுதலையாகியுள்ளார்.

mugilan

தென் தமிழகத்தை அழிக்கும் திட்டமான நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்கும் திட்டத்தை மறைமுக ஆதரவு கொடுத்த அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்த்து அவரது தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட போது கைது செய்யப்பட்ட தோழர் முகிலன் 24 நாட்களுக்குப் பின் நேற்று மதுரை சிறையில் இருந்து பிணையில் வெளி வந்துள்ளார்.

விடுதலை ஆன பின், பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு முகநூலில் பேரறிவாளன் உள்ளிட்ட அப்பாவி ஏழு தமிழர்களை விடுதலை செய்யக்கோரி ஜூன் 11 ஆம் தேதி நடைபெற இருக்கும் வாகனப்பேரணியில் பங்கேற்போம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top