சின்னமலை – விமான நிலையம் இடையே மெட்ரோ ரெயில் ஆகஸ்டு மாதம் ஓடும்

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை முதல் கட்டமாக கோயம்பேடு – ஆலந்தூர் வரை இயக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு ஜுன் மாதம் முதல் உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரெயில் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பல்வேறு கட்டங்களாக சுரங்கப் பாதையிலும், உயர்மட்ட பாதையிலும் பணிகள் நடந்து வருகின்றன.

சைதாப்பேட்டை சின்ன மலையில் இருந்து விமானம் நிலையம் வரையிலான மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்துள்ளன.

9 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த திட்டத்தில் இறுதிக்கட்ட பணிகள் தேர்தலுக்கு பின்னர் விரைவாக நடந்து வருகின்றன.

தண்டவாளம் பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டமும் தற்போது நடைபெற்று வருகிறது. இது தவிர ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான வசதிகள், உள் அலங்கார வேலைகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன.

இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறுகையில், “சின்னமலை – விமான நிலையம் இடையே மெட்ரோ ரெயில் இயக்குவதற்கான பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன.

ஆகஸ்டு மாதம் முதல் சேவை தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன” என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top