தென் இந்தியாவில் பருவமழை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

இந்த ஆண்டு நாடு முழுவதும் பருவமழை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், ”நாடு முழுவதும் ஜூன் மாதத்தில் 107 சதவீத பருவ மழையும், ஆகஸ்ட் மாதத்தில் 104 சதவீத பருவ மழையும் இருக்கும். வட மேற்கு, மத்திய மற்றும் தென் தீபகற்ப இந்தியாவில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக 106 சதவீதமாக இருக்கும்.

வடமேற்கு மாநிலங்களில் 108 சதவீதமும், மத்திய இந்தியாவில் 113 சதவீதமும், வடகிழக்கு மாநிலங்களில் 94 சதவீத மழையும் எதிர்பார்க்கப்படுகிறது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென் இந்தியாவில் தென்மேற்கு பருவமழை 13 சதவீதமாக இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top