மணிப்பூரில் தொடரும் மக்கள் போராட்டம்! அதிகமாக மாணவர்கள் பங்கேற்பு

கடந்த சில நாட்களாக மணிப்பூரில் மிக தீவிரமான போராட்டங்கள் நடைபெற்று கொண்டு இருக்கிறது. மணிப்பூரில் மற்றவர்கள் வந்து செல்வதை கட்டுப்படுத்தும் விதமாக ILPS என்ற சட்டத்தை அமல்படுத்துவதை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மிசோரம் நாகாலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய இந்த சட்டம் ஏற்கனவே அமலில் இருக்கிறது. இந்தச் சட்டம் பிரிடிஷார் காலத்தில் கொண்டுவரப்பட்டதால் அப்போது மணிப்பூர் ராஜாக்கள் ஆட்சி இருந்ததன் காரணமாக அங்கு அந்தச் சட்டம் அமல்படுத்தப்படவில்லை.

manipur

இந்த சட்டம் அமல்படுத்துவதன் மூலம் தங்கள் நிலத்தின் மீதான உரிமையையும் அதன் வழியான வாழ்வாதாரங்களை அந்நியர்களிடம் இருந்து மீட்க முடியும் என்றும் இடப்பெயர்வுகளை குறைப்பதற்காவும் இதை அந்த மக்கள் கோருகின்றனர். அசாம் நாகலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் அகதிகள் இடம் பெயர்ந்து வருபவர்கள் தொடர்பான பிரச்சனை நீண்டகாலமாக இருக்கிறது.
மணிப்பூரில் இயற்கை வளங்களை Corporate களுக்கு வாரி இறைக்கும் சட்டத்திற்க்கு எதிராகவும், அதே நேரம் தேசிய இனங்களின் அனுமதி இல்லாமல் அரசு ஒரு சதுர அடி இடம் கூட தரக் கூடாது எனவும் மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

முக்கியமாக பெண்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் மீண்டும் “நுப்பிலான் “போராட்டத்தை காண ஆயத்தமாகிறது இம்பால்.
நெருக்கடியை தாங்காமல் அரசு நேற்று முதல் நாளை வரை (June 1-3)பொது ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருக்கிறது
.
மாணவர்கள் இதுவரை 15 பேர் படுகாயம், கண்ணீர் புகை குண்டு வீச்சுக்கு பாதிப்பு என தொடர்ந்தும் போராடி வருகிறார்கள்.

போராட்டம் முழுவதும் பெண்களாலும் மாணவிகளாலும் நடைபெற்றுவருகிறது கடந்த 30 ஆம் தேதி நடந்த போராட்டத்தில் சாலையில் அமர்ந்து போராடிய மாணவிகள் மீது காவல்துறை தண்ணிரை பீய்ச்சி அடித்து களைக்க முயன்றது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top