விரைவில் இந்தியாவிற்கு யுரேனியம் சப்ளை செய்ய ஆஸ்திரேலியா முடிவு

ur

இந்தியாவுடனான அணுசக்தி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதையடுத்து விரைவில் யுரேனியத்தை ஏற்றுமதி செய்ய ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. இதை ஆஸ்திரேலிய உயர் ஆணையர் ஹரிந்தர் சிந்து தெரிவித்துள்ளார்.

உலகில் உள்ள யுரேனிய வளத்தில் 40 சதவீதம் ஆஸ்திரேலியாவில் உள்ளது. ஆண்டுதோறும் 7 ஆயிரம் டன்கள் யுரேனியத்தை அந்நாடு ஏற்றுமதி செய்து வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு யுரேனியத்தை ஏற்றுமதி செய்வதற்கான தடை நீக்கப்பட்ட பிறகு இந்தியா-ஆஸ்திரேலியா இடையே சிவில் அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை துவங்கியது. இந்நிலையில், ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமலேயே யுரேனியத்தை ஆஸ்திரேலியாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்ய உள்ளது.

நாட்டின் மின் உற்பத்தியில் 3 சதவீத பங்களிப்பை அணுசக்தி கொண்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top