சச்சின் மகனுக்காக ஓரம் கட்டப்பட்ட சாதனை வீரர்

Sachin-Tendulkars-sons-selection-ahead-of-recordbreaking_SECVPF

மும்பையை அடுத்த கல்யாணில் நடந்த பள்ளி அணிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் (16 வயதுக்குட்பட்டோர்) கே.சி.காந்தி மேல்நிலைப்பள்ளி மாணவர் பிரணவ் தனவாடே 1,009 ரன்கள் (323 பந்து, 129 பவுண்டரி, 59 சிக்சர்) குவித்து உலக சாதனை படைத்தார்.

பண்டாரி கோப்பைக்கான போட்டியில் ஆர்.கே.காந்தி பள்ளிக்காக ஆடிய அவர் ஆர்ய குருகுல பள்ளிக்கு எதிராக இந்த சாதனையை புரிந்தார்.10-ம் வகுப்பு மாணவ ரான பிரணவ் 396 நிமிடங் கள் களத்தில் நின்று 327 பந்துகளில் 1009 ரன்களை குவித்தார். இதில் 129 பவுண் டரிகளும், 59 சிக்சர்களும் அடங்கும்.இதன் மூலம் அவர் 117 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். இதுவரை அங்கீகரிக்கப்ட்ட போட்டிகளில் பிரிட்டனை சேர்ந்த ஏ.ஈ.ஜே. கோலின்ஸ் அடித்திருந்த 628 ரன்கள்தான் உலக சாதனையாக இருந்தது. கடந்த 1899-ம் ஆண்டு இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.

ஆனால் இந்த சாதனை நிகழ்த்திய பிரணவ்வை வயதுக்குட்பட்டோருக்கான மேற்கு மண்டல கிரிக்கெட் அணியில் சேர்க்கவில்லை. ஆனால் சாதனை எதுவும் நிகழ்த்தாத சச்சினின் அர்ஜூன் டெண்டுல்கருக்கு இடம் கிடைத்துள்ளது.இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் படு சூடாக விவாதிக்கப்பட்டு வருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top