ஐசிசி உலக 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அணிக்கு தோனி கேப்டன்!

world leven t20 team20 ஓவர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவியபோதும் தோனிக்கு புதிய கௌரவம் கிடைத்துள்ளது. 2014-ம் ஆண்டுக்கான ஐசிசி உலக 20 ஓவர் அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

வங்கதேசத்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில், வீரர்களின் திறமையை ஐசிசியின் தேர்வுக்குழு ஆய்வு செய்து, இந்த ஆண்டுக்கான 20 ஓவர் அணியைத் தேர்வு செய்தது. இந்தியாவில் இருந்து தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின் ஆகிய நான்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளில் இருந்து தலா இரண்டு வீரர்களும், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, இலங்கை அணிகளில் இருந்து தலா ஒரு வீரர் வீதம் மொத்தம் 11 பேர் தேர்வாகி உள்ளனர். 12-வது வீரராக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிரிஷ்மர் சான்டோகீ இடம்பெற்றுள்ளார்.

இந்த தொடரில் இருந்து சிறப்பாக விளையாடும் 11 பேரைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது தேர்வுக் குழுவுக்கு கடினமான பணி. தொடர் முழுவதும் சிறப்பாக பந்து வீசிய பந்து வீச்சாளர்கள் வரிசையில் ஸ்டெயின், மலிங்கா மற்றும் சாமுவேல் பத்ரி ஆகிய மூன்று பேரைத் தேர்வு செய்துள்ளோம். இந்த அணியில் நெதர்லாந்தைச் சேர்ந்த ஸ்டீபன் மைபர்க் உள்பட ஆறு பேட்ஸ்மேன்கள் உள்ளனர். தோனி கேப்டன், விக்கெட் கீப்பராக செயல்படுவார் ‘ என, ஐசிசி மேட்ச் ரெஃப்ரி மற்றும் அமீரக தேர்வுக் குழுத் தலைவர் டேவிட் பூன் தெரிவித்தார்.

இந்தியாவின் அமித் மிஸ்ரா, பாகிஸ்தானின் அஹமது ஷேஸாத், தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ், இம்ரான் தாஹிர், இலங்கையின் மேத்யூஸ், ஹங்கனா ஹெராத், மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த சுனில் நரைன் மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்தினர். இருப்பினும், ஐசிசி அணியில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top