இட ஒதுக்கீடு வழங்க நீதிமன்றம் தடை: மீண்டும் போராட்டத்தை துவங்க போவதாக ஜாட் சமூகத்தினர்

அரியானாவில் கணிசமாக வசித்து வரும் ஜாட் சமூகத்தினர், தங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன் போராட்டம் நடத்தினர்.இதைத்தொடர்ந்து அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் ‘அரியானா பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் (பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கையில் இடஒதுக்கீடு) சட்டம் 2016’ கடந்த மார்ச் 29–ந் தேதி நிறைவேற்றப்பட்டது.
Central-Forces-Deployed-In-Haryana-As-Jats-Threaten-To_SECVPFஇந்த சட்டப்படி ஜாட் சமூகத்தினர் மற்றும் ஜாட் சீக்கியர், முஸ்லிம் ஜாட், பிஸ்னோயிஸ், ரோர், தியாகிகள் ஆகிய மேலும் 5 பிரிவினருக்கு அரசு பணிகள் மற்றும் கல்வியில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். மேலும் இந்த சமூகத்தினர் பிற்படுத்தப்பட்டோர் (சி) பிரிவில் சேர்க்கப்பட்டனர்.
அரியானா அரசின் இந்த புதிய சட்டத்தை ரத்து செய்யக்கோரி பிவானியை சேர்ந்த முராரி லால் குப்தா என்பவர் அரியானா–பஞ்சாப் மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜாட் சமூகத்தினர் மற்றும் மேலும் 5 பிரிவினருக்கு வழங்கப்பட்டு உள்ள இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் வரும் ஜூன் 5 ஆம் தேதி முதல் மீண்டும் தங்கள் போராட்டத்தை துவங்க போவதாக ஜாட் இன தலைவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், போராட்டத்தில் முன்பு போல் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க பதட்டமான பகுதிகளில் மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சோனிபால் மாவட்டத்தில் 144 தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top