அணு சக்தி விநியோக குழுவில் இந்தியா இடம் பெறுவது ஆயுத பலத்தை சார்ந்தது அல்ல; அமெரிக்கா

au

அணுசக்தி விநியோக குழுவில் இந்தியா இடம் பெறுவதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருவதற்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்திய அமெரிக்கா, என்.எஸ்.ஜியில் உறுப்பினர் ஆவது என்பது ஆயுதங்களை குவிப்பதோ அல்லது ஆயுத போட்டியில்  ஈடுபடுவதையோ சார்ந்தது இல்லை எனவும், அணு சக்தியை மக்கள் பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதை சார்ந்தது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தனது வழக்கமான செய்தியாளர் சந்திப்பின் போது அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் நேற்று கூறியதாவது:- “ அணு சக்தி விநியோக குழுவில் இடம் பெறுவது என்பது அணு ஆயுதங்களை வைத்திருப்பது மற்றும் ஆயுத போட்டியில் ஈடுபடும் விஷயம் இல்லை. அமைதியான முறையில்  அணுசக்தியை மக்கள் நலனுக்காக பயன்படுத்துவதை சார்ந்தது. எனவே, பாகிஸ்தான் நிச்சயமாக இந்த விவகாரத்தை புரிந்து கொள்ளும் என்று நம்புகிறோம்” என்றார்.

அணு சக்தி விநியோக குழுவில் இடம் அளிக்க கோரி இந்தியா விண்ணப்பித்துள்ளது பற்றியும், இந்தியாவுக்கு இக்குழுவில் இடம் அளித்தால், தங்கள் பிராந்தியத்தில் அணு ஆயுத போட்டிக்கு வழி வகுக்கும் என்று பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது பற்றியுமான கேள்விக்கு மார்க் டோனர் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

அணு சக்தி விநியோக குழு எனப்படும் என்எஸ்ஜி குழுவில் 48 நாடுகள் உள்ளன. அணுமின் நிலையங்களுக்கு தேவையான யுரேனியத்தை இந்த குழுவில் இடம்பெற்றிருக்கும் நாடுகள் தங்களுக்குள் தடையின்றி விநியோகம் செய்து வருகின்றன. இதர நாடுகளுக்கு விற்பனை செய்வது இல்லை.

இந்நிலையில் என்எஸ்ஜி குழுவில் இணைய இந்தியா நீண்ட காலமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்கு அணுஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்திட வேண்டும். ஆனால் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளின் அச்சுறுத்தலால் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா இதுவரை கையெழுத்திடவில்லை.இருப்பினும் பொறுப்பான, நம்பகமான அணுசக்தி நாடு என்ற அடிப்படை யில் என்எஸ்ஜி குழுவில் இணைய இந்தியா முயற்சித்து வருகிறது. இதற்கு சீனாவும் பாகிஸ்தானும் முட்டுக்கட்டை போட்டு வருகின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top