ஆன்லைனில் ரெயில் டிக்கெட் கிரிடிட் கார்டு மூலம் எடுத்தால் ரூ.30 சேவை வரி ரத்து

201605281011276225_If-you-take-the-train-ticket-by-credit-card-service-tax-of_SECVPFநாடு முழுவதும் பெரும் பாலான ரெயில் பயணிகள் வீட்டில் இருந்தவாறே இணையதள ஆன்லைனில் டெபிட்கார்டு மற்றும் கிரிடிட் கார்டுகள்மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பயணம் செய்கிறார்கள்.

இதன் மூலம் ரெயில் நிலையங்களுக்கு செல்வது, கியூவில் நீண்ட நேரம் காத்திருப்பது போன்ற சிரமங்கள் தவிர்க்கப்படுகிறது. இதனால் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஆன்லைனில் முன்பதிவு செய்யும் போது முன்பதிவு கட்டணத்துடன் கூடுதலாக ரூ.30 சேவை வரியை ரெயில்வே வசூலிக்கிறது. தற்போது ஆன்லைன் டிக்கெட் முன்பதிவை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் வங்கி டெபிட்கார்டு மற்றும் கிரிடிட்கார்டுகளுக்கான சேவை வரியை ரத்து செய்து ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

வருகிற 1-ந் தேதி முதல் ரூ.30 சேவை வரி ரத்து அமலுக்கு வருகிறது. இதனால் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே ஆன்லைனில் முன்பதிவு செய்யும் போது காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கு கடைசி வரை இருக்கை ஒதுக்கீடு ஆகவில்லை என்றால் அந்த டிக்கெட் ரத்தாகிவிடுகிறது.

அந்த டிக்கெட்டை பயன்படுத்தி பயணம் செய்ய முடியாது என்ற நிலை ஏற்படுகிறது. இதனால் கடைசி நேரத்தில் பயணிகள் அவதிக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. எனவே காத்திருப்போர் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு இருக்கை ஒதுக்கீடு ஆகா விட்டாலும் சாதாரண பெட்டிகளில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top