உலகின் மதிப்புமிக்க வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸியை முந்திய விராட் கோலி

virat

உலகின் மதிப்புமிக்க விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு 3 ஆவது இடம் கிடைத்துள்ளது.

உலக அளவில் விளையாட்டு வீரர்களுக்கு, அவர்கள் நடிக்கும் விளம்பரங்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் மார்க்கெட் மதிப்பு உள்ளிட்டவைகளை அடிப்படையாக வைத்து ஸ்போர்ட்ஸ் ஃப்ரோ என்ற விளையாட்டு நாளிதழ் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில், அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்து வீரர் ஸ்டீபன் கர்ரி மற்றும் பிரான்ஸ் கால்பந்து வீரர் பால் போக்பாவுக்கு அடுத்தபடியாக விராட் கோலிக்கு 3 ஆவது இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ஜோகொவிச்சுக்கு 23 ஆவது இடமும், கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸிக்கு 27 ஆவது இடமும் கொடுக்கப்பட்டுள்ளது. தடகள வீரர் உசேன் போல்ட்டுக்கு 31 ஆவது இடம் கிடைத்துள்ளது. முதல் 50 நபர்களுக்குள் சானியா மிர்சாவின் பெயர் இடம்பெற்றுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top