ஐபிஎல் கிரிக்கெட்: இருமுறை சாம்பியன் வென்ற கொல்கத்தாவை வெளியேற்றியது ஹைதராபாத் அணி

cricket_fb__largeஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 22 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றியை வசப்படுத்தியது.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டீங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்தது. அந்த அணியின், யுவராஜ் சிங் அதிகபட்சமாக 30 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்தார். ஹென்ரிக்ஸ் 31 ரன்களும் வார்னர் 28 ரன்களும் குவித்தனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், மோர்க்கல் மற்றும் ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

163 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியைத் தழுவியது. அதிகபட்சமாக, பாண்டே 36 ரன்களும், கம்பீர் ‌28 ரன்களும் குவித்தனர். ஹைதராபாத் அணியின் ஹென்ரிக்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அடுத்த தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஹைதராபாத் அணி, குஜராத் லயன்ஸ் அணியை நாளை எதிர்கொள்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top